Home இலங்கைசஹ்ரானுடன் பயிற்சி பெற்றவர்களின் கைது தொடர்கிறது…

சஹ்ரானுடன் பயிற்சி பெற்றவர்களின் கைது தொடர்கிறது…

by admin

தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயிற்சி பெற்றிருந்த மொஹமட் ஜெம்சிட் என்ற காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த தினத்தன்று கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அவரின் தொலைப்பேசி இலக்கத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் பின்னர் இந்த பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (03.10.19) இரவு பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயதுடைய மொஹமட் வசீம் என்ற அபூமஸ்வூட் என்ற மாவனெல்லை, பூடாவ வீதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பயிற்சிகளில் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More