Home இலங்கைபொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் 238 பேர்இடம்பெயர்வு

பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் 238 பேர்இடம்பெயர்வு

by admin

(க.கிஷாந்தன்)


பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அந்தவகையில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் 09.10.2019 அன்று மாலை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர். #பொகவந்தலாவ  #வெள்ளம் #இடம்பெயர்வு

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More