Home இலங்கைசகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

சகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

by admin


நாட்டின் சகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டங்களை தயார் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கடந்த வருடத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களைஉள்வாங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாவதாகவும் அவர தெரிவித்துள்ளார். # பல்கலைக்கழகங்களின் #கல்வி #ஆரம்பம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More