பிலிப்பைன்சின் தென்மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ரிக்டர் அளவு கோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்நத நிலநடுக்கம் வடக்கு கோடபாட்டோ மாகாணத்தின் மகிலாலா நகரில் இருந்து தென்மேற்கில் 23 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 2 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தாக்கியதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் நில அதிர்வும் ஏற்பட்டதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பலவீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் சில பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்தநிலையில் நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது #பிலிப்பைன்சில் #நிலநடுக்கம்