139
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திடீரென உடைந்ததையடுத்து தண்ணீர் சுரங்கத்திற்குள் பாரிய விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தைச் சேர்ந்த 200 பணியாளர்கள், 5 எம்ஐ -8 ஹெலிகாப்டர்கள் மற்றும் எம்ஐ -26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஒரு விமானப் பிரிவும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. சுரங்கத்தினுள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுரங்கத்தில் இருந்துவெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கானாவில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி…
மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆண்டுதோறும் மழை, வெள்ளத்துக்கு பலர் பலியாவது தொடர்கதையாக இருந்து வருகின்றது. இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து பெய்த கனமழையின் எதிரொலியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று தெரிவித்தனர்.
சுமார் 300 வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும் வீடுகளை இழந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love