Home இலங்கைபொதுமக்களின் துன்பங்களை போக்கும் ஜனாதிபதியாகுவேன்…

பொதுமக்களின் துன்பங்களை போக்கும் ஜனாதிபதியாகுவேன்…

by admin


தனது நிர்வாகத்தின் கீழ் ஒரு தேசிய அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தப் போவதாகக் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று (29.10.19) பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொது மக்களை கேந்திரமாக கொண்ட சிறந்த பொது சேவையை மேற்கொள்ள தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் உள்ள அனைத்து பிரதேச சபை அலுவலகங்களிலும் ஜனாதிபதி அபிவிருத்தி பிரிவொன்றை ஸ்தாபித்து, அனைத்து தேர்தல் பிரிவுகளிலும், அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் பொதுமக்களின் தனிநபர் துன்பத்தை தெரிவிக்க, பொது பரிந்துரைகளை முன்வைக்க தனது தனிப்பட்ட அதிகாரிகள் குழுவொன்று ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஸ்தாபிக்கப்படும். அதன் ஊடாக நிச்சயமாக பொதுமக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணும் ஜனாதிபதியாக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More