Home இலங்கைவேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரில் அநாமதேயக் கடிதம்

வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரில் அநாமதேயக் கடிதம்

by admin


யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு அநாமதேயக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா சண்முகரத்தினம் என்ற பெயரில் பாடசாலை விலாசம் இடப்பட்டு வந்துள்ள அநாமதேயக் கடிதம் தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டாளரான பாடசாலை முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றுச் சென்றதை அறிந்திருந்த உரிய தபால் உத்தியோகத்தர் அவர் இருக்கும் கொக்குவில் பகுதிக்குச் செல்லும் தபால் உத்தியோகத்தரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டுள்ளார்.

இன்று காலை அவர் முன்னாள் அதிபரின் வீட்டுக்குச் சென்ற போது, அங்கே எவரும் இல்லாததால் கடிதத்தை படலையால் போட்டுவிட்டு வந்துள்ளர்.

இன்று மதியம் வீடு வந்த முன்னாள் அதிபர் கடிதத்தைப் பார்த்துவிட்டு யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைபாடு வழங்கினார்.  #வேம்படி  #முன்னாள்அதிபர் #அநாமதேயக் கடிதம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More