135
மக் டொனால்ட் நிறுவத்தின் தலைமை செயலதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மக் டொனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளதுடன் குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
52 வயதான ஸ்டீவ் 1993 முதல் மக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #மக்டொனால்ட் #தலைமைசெயலதிகாரி #பணிநீக்கம்
Spread the love