Home இந்தியா“காவலில் உள்ள என் அம்மாவுக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்களே பொறுப்பு”

“காவலில் உள்ள என் அம்மாவுக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்களே பொறுப்பு”

by admin


“காவலில் உள்ள எனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்களே பொறுப்பு” என்று மெகபூபாவின் மகள் இல்திஜா மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் திகதி நடவடிக்கை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்- அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் வீட்டுக்காவலிலும், விருந்தினர் மாளிகை காவலிலும் மத்திய அரசு வைத்தது.

இந்த நிலையில் மெகபூபாவின் மகள் இல்திஜா, விருந்தினர் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தாயார் மெகபூபா பள்ளத்தாக்கின் கடுங்குளிரை சமாளிக்க ஏதுவாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையொட்டி டுவிட்டரிலும் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ எனது தாயாரின் உடல்நலம் குறித்து பல முறை கவலை தெரிவித்துள்ளேன். குளிர்காலத்தை சமாளிக்க ஏற்ற வகையில் சாதனங்கள் பொருத்தப்பட்ட இடத்துக்கு எனது தாயாரை இடமாற்றம் செய்யும்படி ஸ்ரீநகர் துணை ஆணையருக்கு  ஒரு மாதத்துக்கு முன்பு கடிதம் எழுதி இருக்கிறேன். எனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என கூறி உள்ளார்.

ஸ்ரீநகர் துணை ஆணையருக்கு  தான் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More