131
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு கொழும்பில் நேற்று (05.10.19) நடத்திய மாநாட்டில் கலந்துக்கொண்ட சகல தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இரவு இடம்பெற்ற போது அதில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் , கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
Spread the love