Home இலங்கைடெல்லியின் வளிமாசடைவால் கொழும்பின் வளிமாசு இரு மடங்காக அதிகரித்தது..

டெல்லியின் வளிமாசடைவால் கொழும்பின் வளிமாசு இரு மடங்காக அதிகரித்தது..

by admin

இந்தியாவின் புதுடெல்லியை பாதித்துள்ள வளிமாசடைதலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வாளர்  இது தொடர்பாக தெரிவிக்கையில், கொழும்பின் வளிமாசு வழமையை விட 2 மடங்காக மாசடைந்திருப்பதாக தெரிவித்தார்.

கியுபிக் மீற்றருக்கு 50 மைக்றோ கிராம் ஆக சமனான வகையில் உள்ள காற்றில் சிறிய அளவிலான துகள்கள் இன்று பிற்பகல் அளவில் 70 மைக்றோ கிராம் ஆக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று இந்த நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காற்று வீசும் திசை மாற்றமடைவதனால் இந்தியாவில் இருந்து இந்த தூசியுடனான மேகம் இலங்கை திசைக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவும் வளிமண்டலம் மாசடைவதனால் சுவாச நோயுடன் கூடிய நபர்கள், சிறுவர்கள் மற்றும் வயதானோர் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று சரத் பிரேமசறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More