இதனால் முகமூடிகள் அணிந்து செல்வது பாதுகாப்பானது என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனால் சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளும், பிள்ளைகளும் இதுதொடர் பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தேசிய இடர்பாதுகாப்பு முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சுவாசக் கோளாறுகள் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் களைப்பைத் தரக்கூடிய வேலைகளைத் தவிர்ப்பது நல்லதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளிமண்டலத்தில் உள்ள வளியில் தூசுத் துகள்கள் மற்றும பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், அது வீழ்ச்சி கண்டு வருவதாக பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் புதுடெல்லியை பாதித்துள்ள வாளிமாசடைதலினால் எற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திணைக்களத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி இது தொடர்பாக தெரிவிக்கையில்,

நாட்டின் வளிமண்டலத்தில் காணப்படும் வளியானது இரு மடங்காக மாசடைந்திருப்பதாக தெரிவித்தார்.

கியுபிக் மீற்றருக்கு 50 மைக்றோ கிராம் ஆக சமனான வகையில் உள்ள காற்றில் சிறிய அளவிலான துகள்கள்  70 மைக்றோ கிராம் ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதேபோன்று இந்த நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காற்று வீசும் திசை மாற்றமடைவதனால் இந்தியாவில் இருந்து இந்த தூசியுடனான மேகம் இலங்கை திசைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவும் வளிமண்டலம் மாசடைவதனால் சுவாச நோயுடன் கூடிய நபர்கள், சிறுவர்கள் மற்றும் வயதானோர் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று சரத் பிரேமசறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வாறு வளி மாசடைந்திருப்பதால் சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட  வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும், முகமூடியை அணிவது பாதுகாப்பானதாக இருக்கும்.

இந்நிலையில், தொடர்ச்சியான நோய் அறிகுறிகள் ஏதாவது தற்போதைய நாட்களில் அவதானிக்கப்படுமாயின், வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு நகரின் வளிமண்டலப்பகுதியில் கடந்த இரு தினங்களாக பனி மூட்டம் அல்லது முகில்கல் போன்ற நிலை காணப்படுகின்றது. தூசுத் துகள்களே அவ்வாறு அவதானிக்கப்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கொழும்பில் வளி மாசடைதலானது இயல்பான மட்டத்திலிருந்து தற்கோது அது இரு மடங்காக அதிகரிகத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இன்றைய தினம் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.