கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 10 வருடம் சிறைத் தண்டனை வழங்கப்படும் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.
கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக இருந்துவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி பெரும்பாலான வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தினை தடுக்க ஐசிசி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் அதேவேளைஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளும் கிரிக்கெட் சூதாட்டத்தினை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை கிரிக்கெட் சூதாட்டத்தினை கிரிமினல் குற்றத்தின் கீழ் கொண்டு வர ஆலோசித்து வந்தநிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமாக நிறைவேறியுள்ளது. இதன்மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில ஈடுபட்டால் கிரிமினல் குற்றமாகும் என்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #கிரிக்கெட்சூதாட்டம் #கிரிமினல்குற்றம் #சிறை