Home இலங்கைஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்???

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்???

by admin


சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

65 வயதுக்கும் மேற்பட்ட சிறுகுற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். கொலை, கொள்ளை, பெண்கள் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 284 கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்த கைதிகள் குறித்த விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைத்தவுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறைகளில் அடைபட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவர்கள், வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்களை பதியிவியில் இருந்து விலகிச் செல்லும் போதும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி முயலவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன….

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More