Home இலங்கை2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்கின்றன…

2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்கின்றன…

by admin

2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (16.11.19) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் இதுவரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சியில் 30% வாக்குப்பதிவுகளும் காலியில் 25% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், குருணாகலில் 30 முதல் 35% வரையிலான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. நுவரெலியாவில் 40% வாக்குப்பதிவுகளும்,  களுத்துறையில் 20% வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வவுனியாவில் 25% வாக்குப்பதிவுகளும்  இரத்தினபுரியில் 40% வாக்குப்பதிவுகளும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 19% வாக்குப்பதிவுகளும், கம்பஹாவில் 30% வாக்குப்பதிவுகளும்,  கண்டியில் 30%, வாக்குப்பதிவுகளும்,  மொனராகலையில் 45% வாக்குப்பதிவுகளும், அநுராதபுரத்தில் 30%, வாக்குப்பதிவுகளும் பொலநறுவையில் 20% வாக்குப் பதிவுகளும், மன்னாரில் 30% வாக்குப்பதிவுகளும் புத்தளத்தில் 40% வாக்குப்பதிவுகளும் மாத்தறையில் 30% வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More