அத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறை நடத்த உதவியமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இதுவரை காலமும் தன்னுடன் அரயல் பயணத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தன்னுடன் 26 வருடங்களாக இணைந்திருந்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதித் தலைவர் பதவியலிருந்து விலகினாலும் கூட மக்களுக்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாச விடுத்துள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.