Home இலங்கை ஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு

ஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு

by admin


வவுனியா ஓமந்தை காவல்துறைதுறைப் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியிலிருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றையதினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியில் துப்பரவுப்பணியில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில் அது தொடர்பாக ஓமந்தை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நீதி மன்ற உத்தரவினை பெற்று இன்று அவற்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து மூன்று மகசின்கள், மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியனவே காவல்துறையினரால் மீட்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஓமந்தை  #பழுதடைந்த #வெடிபொருட்கள் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More