லாவோஸ் நாட்டில் தாய்லாந்து எல்லையை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியனிலிருந்து 220 கிமீ தொலைவில் நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலி நகரின் வடமேற்கு திசையில் 53 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #லாவோஸ் #நிலநடுக்கம்
Spread the love
Add Comment