இலங்கை பிரதான செய்திகள்

கல்முனை பிராந்தியத்தில் நள்ளிரவு போக்குவரத்து காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

பாறுக் ஷிஹான்

 

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் இரவு முதல் அதிகாலை வரை விசேட   போக்குவரத்து காவல்துறையினர்   மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதன்கிழமை (20) இரவு முதல் மறுநாள் அதிகாலை  வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது    கல்முனை சுற்றுவட்டம் ,நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி ,பாண்டிருப்பு,   போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனை நடவடிக்கையில்  போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரங்கள் இருந்தும் வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை தொடர்பில் போதிய அறிவின்மை தொடர்பாக கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறை  அதிகாரிகள் ஊடகவியலாளரிடம் குறிப்பிட்டனர்.விசேட கடமைக்காக பிராந்திய காவல் நிலையங்களில் இருந்து பல் வண்டியில் ஏற்றி வரப்பட்ட காவல்துறையினர் முக்கிய சந்திகளில் நிலைநிறுத்தப்பட்டனர்.

இதன் போது  விழிப்பூட்டல் செயற்பாடுகள்   மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது  தலைக்கவசம் அணிவதில்லை  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது  அதிவேகமாக செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டது.  இச்சோதனை நடவடிக்கையானது  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட  காவல்துறை அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன்   கல்முனை காவல்துறை நிலைய  போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து இராணுவத்தினர்  இணைந்து  முக்கிய சந்திகள்  பிரதான  வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர்.

இதன் போது   100க்கும்  அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்  60 க்கும்  மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது.குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, மோட்டார் சைக்கிளின் பக்க கண்ணாடி இன்மை,   சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அதிக சத்தம் எழுப்பும் கோன் ,போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  #கல்முனை  #போக்குவரத்து   #சோதனை

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap