Home இலங்கைபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது…

பொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது…

by admin

எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்லில் பெற்ற முன்னேற்றம் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட மேலும் சில பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More