153
திடீர் என அமைக்கப்பட்ட இராணுவ முகாம் , அகற்றப்பட்ட நினைவு தூபி ,திடீர் மின்வெட்டு மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் என்பவற்றுக்கிடையில் மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன் கிழமை மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு தூபி அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று புதன் கிழமை மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் இடம் பெற்றது.
பண்டி விருச்சான் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீர் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வுத்துறையினர் மற்றும் பொலிஸ் ,இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். #அச்சுறுத்தல் #மடு #பண்டிவிரிச்சான் #மாவீரர்துயிலும்இல்லம் #நினைவஞ்சலி
Spread the love