Home இலங்கையாழ்.மாநகர சபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

யாழ்.மாநகர சபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

by admin

 

யாழ்.மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்ட போது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு வழங்கினார்கள். அதனால் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 16 பேர் வாக்களித்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அதனை அடுத்து மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.   இதேவேளை இன்றைய அமர்வில் 7 உறுப்பினர்கள் சமூகமளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   #யாழ்மாநகரசபை #வரவுசெலவுதிட்டம்  #தோற்கடிப்பு #ஈழமக்கள்ஜனநாயககட்சி  #தமிழ்தேசியமக்கள்முன்னணி
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More