Home இலங்கைஷஹ்ரான் குழுவால் படுகொலை செய்யப்பட்ட காவற்துறையினரின் நினைவாக குருதிக்கொடை….

ஷஹ்ரான் குழுவால் படுகொலை செய்யப்பட்ட காவற்துறையினரின் நினைவாக குருதிக்கொடை….

by admin

ஷஹ்ரான் குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்களான கணேஸ் தினேஸ், இந்திஹ பிரசன்ன ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (30) காலை 8 மணி முதல் காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

கடந்த வருடம் 30 -11-2018 ஆம் ஆண்டு வவுணதீவு சோதனை சாவடியில் கடமையில் இருந்த வேளை ஷஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகளினால் கொடூரமாக முறையில் படுகொலை செய்யப்பட்ட இரு காவற்துறையினரின் நினைவாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது. இரத்ததான முகாமிற்கு பல இளஞர்கள் ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்துவருகின்றமையை காண முடிந்தது . கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கியின் வைத்தியர்குழாம், தாதியர்கள், ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More