Home இலங்கைவடக்கில் சட்டம் ஒழுங்கை  காப்பாற்ற இணையுமாறு மக்களுக்கு அழைப்பு

வடக்கில் சட்டம் ஒழுங்கை  காப்பாற்ற இணையுமாறு மக்களுக்கு அழைப்பு

by admin


வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை கால்துறையினருடன் இணைந்து செயற்பட வருமாறு யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக புதிதாக இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்த மகேஷ் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்

வடக்கில் இன்றைய தினம் பிரதிகாவல்துறைமா அதிபராக எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன் வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த என்னாலான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளேன் அத்தோடு காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நான் முழுமையாக முயற்சிப்பேன்.

அத்தோடு வடக்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் நான் பூரணமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன். எனினும் பொது மக்களுக்கு நான் ஒரு அழைப்பு விடுக்கின்றேன் சட்டத்தையும் ஒழுங்கையும்நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார். முன்னர் இவர் காவல்துறை தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார்

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபராக இருந்த ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.  #வடக்கில்  #சட்டம் #ஒழுங்கை  #காப்பாற்ற #மக்களுக்கு  #அழைப்பு  #மகேஷ்ரத்நாயக்க

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More