உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் 20 பிராங்க் என்னும் வெள்ளி நாணயக் குற்றியிலேயே இவ்வாறு அவரது முகம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாணயக்குற்றி எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி புழக்கத்திற்கு விடப்படவுள்ளது.

இதன்மூலம் ரோஜர் பெடரர் சுவிஸ் நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதலாவது உயிருள்ள நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 38 வயதான ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்றுள்ளதன் மூலம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் வீரர்களுள் மிக அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது  #ரோஜர்பெடரர்  #உருவம் #நாணயம் #வெளியீடு #டென்னிஸ்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.