Home இலங்கைமுன்னாள் அமைச்சர் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் வழக்கிலிருந்து விடுவிப்பு

by admin

முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டதனை அடுத்து அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்டரீதியற்ற முறையில் விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அதிகாரி என்ற புதிய பதவிக்கு அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை நியமிப்பதற்கு விமான சேவைகள் பணிப்பாளர் சபையை ஊக்குவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  #அமைச்சர்   #பிரியங்கர ஜயரத்ன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More