யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஆச்சிமட அரசடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த பழமை வாய்ந்த “ஆச்சி மடம்” என அழைக்கப்படும் இளைப்பாறு மண்டபம் மழை காரணமாக இடிந்து வீழ்ந்துள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாகவே இந்த மண்டபம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த மண்டபமானது நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். முன்னைய கால பகுதியில் கால் நடையாக மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொண்ட வேளைகளில் மக்கள் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த பழமையான மண்டபத்தை ஆலய நிர்வாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்திருந்த போதும், கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால் மண்டபம் வீழ்ந்துள்ளது.
பழமைவாய்ந்த இந்த மண்டப அமைப்பை போன்றே அதே இடத்தில் புதிதாக மண்டபத்தை அமைக்க போவதாக அரசடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். #பழமை #ஆச்சி மடம் #கோண்டாவில் #அரசடிவிநாயகர்