Home உலகம்டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி

டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி

by admin

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில் அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; எனவும் இல்லாவிடின் உக்ரைனுக்கு வழங்கும் பயங்கரவாத ஒழிப்பு நிதியை நிறுத்திவிடுவோம் என அந்த நாட்டு ஜனாதிபதி; விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக முறைப்பாடு எழுந்திருந்தது.

இதையடுத்து, டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்திருந்தனர்

ஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற புலனாய்வு குழு இந்த விசாரணையை நடத்தி வரும் நிலையில் , விசாரணை தொடர்பான அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விசாரணை முடிவில் ‘தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது விசாரணையை மேற்கொள்ள உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் (செனெட்) சபாநாயகர் நான்சி பெலோசி இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.  #டிரம்ப்  #நம்பிக்கையில்லாதீர்மானம்  # சபாநாயகர் #அனுமதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More