163
இந்தியாவின், டெல்லியில் உள்ள ஜான்சி ராணி வீதியில் அமைந்துள்ள தனாஜ் மண்டியில் இன்று (08) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விரைவாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததாகவும் தகவலறிந்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். #டெல்லி #தீவிபத்து
Spread the love