Home உலகம்மலேசியாவில் மூவருக்கு மரணதண்டனை

மலேசியாவில் மூவருக்கு மரணதண்டனை

by admin


மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில், மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பினாங்கு உயர் நீதிமன்றத்தினால் இந்த இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 63 வயதுடைய மலேசியரான பாலகிருஷ்ணன், ஈரானியர்களான 37 வயது மொஹமட் அபாஸி யூனெஸ், 31 வயது நம்ஸிகி வாஜ் செயெத் ரெஸா ஆகிய மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த மூவரும் சுமார் 48 கிலோகிராம் போதைப் பொருளைக் கடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரின் சோதனை நடவடிக்கையின் போது அவர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவரை பினாங்கு உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது என்பதும் குறிப்pபடத்தக்கது  #மலேசியா  #மரணதண்டனை  #போதைப்பொருள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More