Home இலங்கைசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…

சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…

by admin

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் பெண் அதிகாரிக்கு    ​வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (09.12.19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் நேற்று முதல் வாக்குமூலம் பதிவு செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

மேலும், அவரிடம் இன்றும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர்கள், அதற்காக அவரை இன்றைய தினம் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராயந்த பிரதான நீதவான், குறித்த பெண்ணை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அவர் தாக்குதலுக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ முகங்கொடுத்துள்ளாரா என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும், தற்போது அவர் ஏதேனும் மன அழுத்தத்தில் உள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More