கேரளா கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை(10) கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.
கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞன் கைதாகி இருந்தார். கைதாகிய குறித்த இளைஞனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக கொண்டு அப்பகுதி வீடு ஒன்றில் கேரளா கஞ்சாவினை தராசில் அளவீடு செய்த இரு பெண்கள் கைதாகி இருந்தனர்.
இதில் இரு பெண்களும் மன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறாக முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரான பாத்திமா சுமையா என்பவரை எதிர்வரும் டிசெம்பர் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் கேரளா கஞ்சாவினை தராசில் அளவீடு செய்த இரு பெண்களிடம் இருந்து சுமார் 7 கிலோ கஞ்சாவினை காவல்துறையினர் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #கேரளாகஞ்சா #பெண் #விளக்கமறியல்