உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல்பொருள் அங்காடி உள்பட 2 இடங்களில் மேற்படி துப்பாக்கிச்சூட்டினை நடத்திய 2 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுவதனால் காவல்துறையினர்; விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  #அமெரிக்கா  #துப்பாக்கிச்சூடு  #உயிரிழப்பு

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.