உலகம் பிரதான செய்திகள்

2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார்…

பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்த போராடிய சுவீடன் நாட்டு பாடசாலை மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘ரைம்’ (TIME) பத்திரிகையால் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்.

1927ம் ஆண்டில் இருந்து ரைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவட்டர்களில் 16 வயதுடைய கிரேட்டா துன்பெர்க் தான் மிகவும் இளையவர்.

கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புகளை புறக்கணித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹாஷ்டெக் மிகவும் பிரபலமானது.

அந்த போராட்டத்தில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பங்கேற்பதற்கு கிரேட்டா முக்கிய உந்துதலாக திகழ்ந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில்  அமைதிக்கான நோபல் பரிசுக்கும் கிரேட்டா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கிரேட்டா துன்பெர்க்

கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டி உரையாற்றினார்.

ரைம் பத்திரிகையின் இந்த கவுரவத்தை, #FridaysForFuture இயக்கத்தினருடனும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்களுடனும் பகிர்ந்துகொள்வதாக கிரேட்டா துன்பெர்க் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் பருவநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் பூர்வமான கேள்விகளை  கிரேட்டா எழுப்பியுள்ளார்.

”இந்த ஆண்டு கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையின் வலிமையான குரலாக கிரேட்டா மாறினார், உலகளாவிய அளவில் பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்துகிறார். ” என்று டைம் பத்திரிக்கையின் இந்த பரிந்துரையை அறிவித்த அதன் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல் தெரிவித்தார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link