உலகம் பிரதான செய்திகள்

தமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…


பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார்  தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

“வணக்கம் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சமூகத்தினரின் விழுமியங்களும், எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும், மற்றும்அவர்களது கல்விச்சாதனைகள் மிகச்சிறந்தமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரெக்சிட்டை நாங்கள் சாத்தியமானதாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்,

பிரெக்சிட்டை நிறைவேற்றினால் நாங்கள் தொழில்முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம்,தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம் ,முதலீடுகளை அதிகரிக்கலாம்,மேலும் பிரெக்சிட் சாத்தியமானதும் நாங்கள் எங்கள் குடிவரவுகொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம், அவுஸ்திரேலியாவில் காணப்படுவதை போன்ற புள்ளிகளை அடிப்படையாககொண்ட குடிவரவு கொள்கையை முன்வைக்கலாம்,இது பிரிட்டனிற்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ் சமூகத்திற்கு எனது நன்றிகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் நல்லிணக்கம்நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்,கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும், எங்கள் முன்னாள இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான்நம்புகின்றேன்,இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.