Home உலகம்பாகிஸ்தானில் இரு வாகனங்கள் தீப்பிடித்து விபத்து – 15 பேர் பலி

பாகிஸ்தானில் இரு வாகனங்கள் தீப்பிடித்து விபத்து – 15 பேர் பலி

by admin


தென்மேற்கு பாகிஸ்தானில் பேருந்து ஒன்று வான் மீது மோதியதால் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாகாணம் தோர காசி கான் மாவட்டத்தில் இருந்து பலூசிஸ்தானின் குவெட்டா நகருக்கு சென்ற பயணிகள் பேருந்து எதிர்திசையில் வந்த வானுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து எற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய வானில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தி வரப்பட்டதாகவும் அதனாலேயே 2 வாகனங்களிலும் தீப்பிடித்தும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #பாகிஸ்தானில்  #வாகனங்கள் #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More