Home இலங்கைசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது

சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது

by admin

(க.கிஷாந்தன்)

நோட்டன் பிரிட்ஜ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட லக்ஷபான பத்தனஹேன பகுதியில் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 15.12.2019 அன்று மாலை நோட்டன் பிரிட்ஜ்  காவல்நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து பல இலட்சம் பெறுமதியான 15.5 கிலோ வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்த சந்தேக நபரை  காவல்துறை பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும், எதிர்வரும் புதன்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்த  செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காட்டு பகுதியில் இந்த வல்லப்பட்டை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இதை சட்டவிரோதமாக வெட்டி விற்பனை செய்பவர்கள் அதிகமானோர் இப்பகுதியில் வாழ்கின்றார்கள்.

உலகில் மிக அதிக விலை கொண்ட வாசனை திரவியங்களை தயாரிப்பதற்காக இந்த வல்லப்பட்டை மரங்களை உபயோகிப்பதாக நோட்டன் பிரிட்ஜ்  காவல்துறையினர்  மேலும் தெரிவிக்கின்றனர். #சட்டவிரோதமான  #வல்லப்பட்டை  #விற்பனை #கைது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More