Home இலங்கைசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்

சுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்

by admin


கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில், விசாரணைகளுக்காக, இன்று முன்னிலையானதையடுத்தே இவ்வாறு அவர் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

மனநல பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர், அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி வழங்கிய சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் அவரின் மனநிலை குறித்து பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  #சுவிஸ்   #அங்கொடை  #மனநலவைத்தியசாலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More