இந்தியா பிரதான செய்திகள்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம்


டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சுப்பையா என்னும் இரு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்ததாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. .

அவர்களை விடுவிக்கக்கோரியும் போராட்டத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபடும் காவல்துறையியனரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் இவ்வாறு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையினர் நுழைந்துள்ள நிலையில் அவர்களை எதிர்த்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

மாணவர்களிடம் பேசிய பல்கலைக்கழக தரப்பு, இது மத்திய அரசு கொண்டுவந்த சட்டமெனவும், தங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிய போதும் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களை விடுவிக்காமல் போராட்டத்தினை நிறுத்த மாணவர்கள். மறுத்துவிட்டனர்

இதனை அடுத்து காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேறியுள்ளநிலையில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.  #சென்னைபல்கலைக்கழக  #மாணவர்கள் #போராட்டம் #குடியுரிமைசட்டத்திருத்தம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link