165
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை இன்று (18) பிறப்பித்துள்ளது.
சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #ஊடகவியலாளர் #பிரகீத்எக்னெலிகொட #காணாமல்போனமை #வழக்கு #விசாரணை
Spread the love