Home இலங்கைசிறைச்சாலை வான் விபத்துக்குள்ளாகியதில் சிறைச்சாலை அதிகாரி உயிரிழப்பு

சிறைச்சாலை வான் விபத்துக்குள்ளாகியதில் சிறைச்சாலை அதிகாரி உயிரிழப்பு

by admin


சிகிரியா, திகம்பதன பிரதேசத்தில் சிறைச்சாலை வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை வழக்கு ஒன்றுக்காக சிறைக்கைதி ஒருவரை பல்லகெல சிறைச்சாலையில் இருந்து ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற வீதியை விட்டு விலகிய வான், அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பல்லகெலே சிறைச்சாலையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சிறைக்கைதி மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  #சிறைச்சாலை  #விபத்து #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More