வவுனியா, போகஸ்வெவ முகாமிற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவரால் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த இராணுவ சிப்பாய் இன்று (25.12.19) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய் சிகிச்சைக்காக அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.