Home இலங்கை955501 சதுர Km பரப்பளவு நிலப்பகுதியிலிருந்து SHARP  நிறுவனத்தால் ஆபத்தான  கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன… 

955501 சதுர Km பரப்பளவு நிலப்பகுதியிலிருந்து SHARP  நிறுவனத்தால் ஆபத்தான  கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன… 

by admin
     
இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப்( SHARP)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 டிசெம்பர் மாதம்; 21 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஒன்பது இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து ஐநூற்று பதினொன்று  சதுரமீற்றர் பரப்பளவில் (955,501KM) இருந்து இருபதாயிரத்து தொளாயிரத்து எண்பத்து நான்கு(20984)  அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
தொடந்தும் மனித நேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள்  பளை மற்றும் கிளாலி பகுதிகளில்  நடைபெறும் எனவும் தெரிவித்தார்  #நிலப்பகுதியில்  #SHARP  #கண்ணிவெடிகள்   #ஜப்பான்
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More