Home இலங்கைஜனாதிபதியின் ஆலோசகர் என கூறி பாடசாலை அதிபரை அச்சுறுத்திய நபர் கைது.

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறி பாடசாலை அதிபரை அச்சுறுத்திய நபர் கைது.

by admin

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீயானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற அந்நபர் 11ஃ9, புனித செபஸ்டியான் மாவத்தை மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்தவராவார்.

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இந்த நபரை நாளைய தினம் மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைசெய்யவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  #ஜனாதிபதியின்ஆலோசகர்  # அதிபர் #கைது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More