உலகம் பிரதான செய்திகள்

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண்ணும் இரு குழந்தைகளும் பலி

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.  இத்தாலியில் அல்ப்ஸ் மலைத்தொடரில், ஒஸ்ரிய எல்லைக்கு அருகேயுள்ள வால் செனேலஸ் என்ற பனிமலையில் பனிச்சறுக்கு பயணம் செய்த ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிற 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியுமே இவ்வாறு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மூவரில் 2 பேர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதே இடத்தில் பனிச்சரிவில் சிக்கிய ஒரு தந்தையும், அவரது 11 வயது மகனும் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்pறனர் என்பதும் குறிப்பிடத்தக்கது #இத்தாலி  #பனிச்சரிவில்  #பெண் #குழந்தைகள்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.