Home இலங்கையாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், ஒன்றுகூடல் நிகழ்வும்… 

யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், ஒன்றுகூடல் நிகழ்வும்… 

by admin

யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், வருடத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும்   நேற்று யூ.எஸ் விருந்தினர் விடுதியில் இடமபெற்றது. கொல்லப்படட்ட ஊடகவியலாளர்களுக்கான மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் பொது சுடரினை ஜயாத்துரை நடேசனின் துனைவியார் ஏற்றிவைத்தார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வில்  அமரர் மயில்வாகனம் நிமலராஜன் விருதினை, பொன்னையா மாணிக்கவாசகத்திற்கும், அமரர் தராசி டி.சிவராம் விருதினை,  நடேசப்பிள்ளை வித்தியாதரனுக்கும்,  அமரர் ஜயாத்துறை நடேசன் விருதினை விஸ்வராஜா காந்தகுமாருக்கும், வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வழங்கி வைத்தார்.

அமரர் செல்வராஜா ரஜிவர்மன் விருதினை, சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.கேசவராஜா வழங்கி வைத்தார். அமரர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்தி விருதினை, செல்வி சதாசிவன் சகீலாவிற்கு வடக்கு மாகாண சபையின் பேரவை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் வழங்கிவைத்தார்.

அமரர் சகாதேவன் நிலக்சன் விருதை, தர்மபாலன் ரிலக்சனுக்கு நிலக்சனின் பெற்றோர் வழங்கிவைத்தனர்.  அமரர் சுப்பிரமணியம் சுகிர்தராஜான் விருதினை ஹாஜிமீராலெப்பை லாபீருக்கு  வணபிர றூபன்மரியாம்பிள்ளை வழங்கிவைத்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More