Home உலகம்அமெரிக்காவின் ரொக்கெட் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உள்ளிட்ட 7 பேர் பலி

அமெரிக்காவின் ரொக்கெட் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உள்ளிட்ட 7 பேர் பலி

by admin

ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது அமெரிக்கா நடத்திய ரொக்கெட் தாக்குதலில், ஈரானின் முக்கிய படைப்பிரிவின் தளபதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கில் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியிருந்தனர்.

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ரொக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறியுள்ளன.

இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், ஜனாதிபதி டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க கொடியை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#அமெரிக்கா #தாக்குதல்  #ஈரான் #ராணுவதளபதி   #பலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More