Home இலங்கைரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்..

ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்..

by admin

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இன்று மாலை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவரது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இன்று (04.01.20 சனிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சோதனையிட்டிருந்தனர்.

இதன்போது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குறித்த தேடுதலின் போது அவரது வீட்டில் இருந்து அனுமதி பெறாத கைத் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டமையினைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More