0
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது மணியளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் கதவை பூட்டிய நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் கன்டர் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் வீட்டில் உள்ளவர்கள் குறிப்பிட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #அச்சுவேலி #வீடுடைப்பு
Spread the love