யாழில் உள்ள சீரடி சாயி நாதர். ஆலய உற்சவம் ஒன்றில் சாயிநாதருக்கு மதுபானம் படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பலர் மத்தியில் விமர்சனங்களை உண்டு பண்ணியது. அது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன் வைக்கப்பட்டது. அதன் உச்ச கட்டமாக சாயி நாதருக்கு மதுபானம் படைக்கப்பட்டமை தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை ஒரு தனிநபர் எழுதிய போது, அவர் வேலை காரணமாக வெளியூரில் தங்கி நிற்கும் நிலையில் சாயிநாதரின் பக்தர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் தாயாரை மிரட்டும் தொனியில் , சாயிநாதர் தொடர்பில் பதிவுகளை போட வேண்டாம் என கூறுமாறு அச்சுறுத்தி சென்று இருந்தார்.


